கோவை புறநகர் பகுதியில் போதைப் பொருள்கள், சட்ட விரோத மது விற்பனை நடமாட்டத்தை தடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சட்ட விரோதமாக உணவு விடுதிகளில் மது விற்பனை மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அன்னூர், கோவில்பாளையம், சூலூர், கருமத்தம்பட்டி, செட்டிபாளையம், மதுக்கரை, க.க.சாவடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உணவு விடுதிகள் மற்றும் தாபாக்களில் சட்ட விரோதமாக மது
விற்பனையில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதை அடுத்து தனிப்படை காவல் துறையினருக்கு அதிரடி சோதனை நடத்த காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன் பெயரில் அப்பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள், தாபாக்கள் ஹோட்டல்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 18 தாபாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தாபாக்களை அந்தந்த பகுதிகள் உள்ள வட்டாட்சியர், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் சீல் வைத்தனர்.