திருச்சி விமான நிலையத்தில், பெண் பயணியிடமிருந்து ரூ. 18.44 மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் புதன்கிழமை திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் பெண் பயணியொருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அவர் உடலுக்குள் மறைத்து 242 கிராம் தங்க கட்டியை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை புதன்கிழமை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் தொடர்பான விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 18.44 லட்சம் என கூறப்படுகிறது.
திருச்சி ஏர்போட்டில் ரூ.18.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…
- by Authour
