Skip to content
Home » பட்டியிலிருந்த 175 ஆடுகள் திருட்டு…. துணை போகும் போலீசார்…. கண்டித்து பொதுமக்கள் தர்ணா….

பட்டியிலிருந்த 175 ஆடுகள் திருட்டு…. துணை போகும் போலீசார்…. கண்டித்து பொதுமக்கள் தர்ணா….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே அழுந்தலைப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கசாமி மற்றும் பெருமாள். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். இதில் ரங்கசாமிக்கு சொந்தமான 110 ஆடுகள் மற்றும் பெருமாளுக்கு சொந்தமான 65 ஆடுகள் என மொத்தம் 175 ஆடுகளை கிராமத்தின் அருகில் உள்ள வயல் பகுதியில் பட்டியமைத்து ஒன்றாக ஆடுகளை வளர்த்து வந்தனர்.

கடந்த 2022 ம் ஆண்டு ஜூன் மாதம் 9 ம் தேதி இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் மொத்தமாக அனைத்து ஆடுகளையும் களவாடிச் சென்றனர். காலையில் வழக்கம் போல் பட்டிக்குச் சென்ற ரங்கசாமி மற்றும் பெருமாள் ஆடுகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைத்தனர். இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்தனர் புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டுப் போன ஆடுகளில் 10 ஆடுகளை மீட்டு உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் மீதமுள்ள ஆடுகளை மீட்காதால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் புகார் அளித்தனர்.அதன் பேரில் ஆடுகளை விரைவில் கண்டுபிடித்து தருமாறு
நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு படியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குற்றவாளிகளின் இருப்பிடத்தைக் கூறியும் கைது செய்யாமல் குற்றவாளியை காப்பாற்றுவது ஏன் குற்றவாளியை உடனே கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில்

அடைக்க வேண்டும். வழக்கறிஞர் சத்யம் சரவணன் தலைமையில் விரைவில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சிறுகனூர் காவல் ஆய்வாளரை கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் புகார் கூறி அந்த பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்களை அலைக்கழிப்பதாக நினைத்து ஆடுகளை உடனே மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சிறுகனூர் காவல் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி
டிஎஸ்பி அஜய்தங்கம் சிறுகனூர் காவல்நிலையத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஆடு திருடர்களை தொடர்ந்து தேடி வருகிறோம். மேலும் சிறுகனூர் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்து ஆடுகளை மீட்டு தர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!