Skip to content
Home » ஐபிஎல் மினி ஏலம்…. வீரர்களுக்கான ஏலத்தொகை வௌியீடு….

ஐபிஎல் மினி ஏலம்…. வீரர்களுக்கான ஏலத்தொகை வௌியீடு….

  • by Authour

16வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதில் பதிவு செய்துள்ள வீரர்கள் மற்றும் அவர்களுக்கான அடிப்படை விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 15 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த வருடம் 16வது சீசன் நடைபெறவுள்ளது. கடந்த முறை மெகா ஏலம் நடைபெற்ற நிலையில், இந்த முறை மினி ஏலம் நடைபெறவுள்ளது. ஐபிஎல் மினி ஏலம் வரும் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை கொச்சியில் நடைபெறவுள்ளது.

இந்த மினி ஏலம் மதியம் 2.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும். அதற்கு முன்பே முடிய கூட வாய்ப்பு இருக்கிறது. முன்னதாக இந்த ஏலத்திற்கு 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். மினி ஏலத்தில் அத்தனை பெயரும் ஏல மேடைக்கு கொண்டு வரப்பட சாத்தியம் இல்லை என்பதால் அதனை ஃபில்டர் செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. தற்போது திருத்தப்பட்ட இறுதிக்கட்ட ஐபிஎல் பட்டியலில் 405 வீரர்கள் உள்ளனர். இதில் 273 இந்திய வீரர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.

இந்த வீரர்கள் அனைவரும் 43 செட்களாக பிரிக்கப்பட்டுயுள்ளனர். இந்நிலையில், இதில் பதிவு செய்துள்ள வீரர்கள் மற்றும் அவர்களுக்கான அடிப்படை விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரூ.2 கோடி அடிப்படை விலை: கேன் வில்லியம்சன், நேதன் குல்ட்டர்நைல், கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், டாம் பாண்ட்டன், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜாமி ஓவர்டன், கிரைக் ஓவர்டன், அடில் ரஷீத், ஃபிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், ரைலீ ரூசோ, ராசி வாண்டர்சன், ஆஞ்சலோ மேத்யூஸ், நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் உள்ளிட்டோர் அடிப்படை விலை 2 கோடி ரூபாய் பிரிவில் உள்ளனர்.

ரூ.1.5 கோடி அடிப்படை விலை: சீன் அபாட், ரைலீ மெரிடித், ஜெய் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா, ஷகிப் அல் ஹசன், ஹாரி ப்ரூக், வில் ஜாக்ஸ், டேவிட் மலான், ஜேசன் ராய், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு உள்ளிட்டோர் அடிப்படை விலை 1.5 கோடி ரூபாய் பிரிவில் உள்ளனர். ரூ.1 கோடி அடிப்படை விலை: மயன்க் அகர்வால், கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே, முகமது நபி, முஜீபுர் ரஹ்மான், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், ஆண்ட்ரூ டை, ஜோ ரூட், லுக் உட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், மார்டின் கப்டில், கைல் ஜாமிசன், மேட் ஹென்ரி, டாம் லேதம், டேரைல் மிட்செல், ஹென்ரிச் கிளாசன், டப்ரைஸ் ஷம்ஸி, குசால் பெரேரா, ரோஸ்டான் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷேய் ஹோப், அகீல் ஹுசைன், டேவிட் வீஸ் உள்ளிட்டோர் அடிப்படை விலை 1 கோடி ரூபாய் பிரிவில் உள்ளனர்.

ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம் அடிப்படை விலை: ரீஸ் டாப்ளி, வைன் பார்னெல், டேனியல் சாம்ஸ், ஜோஷுவா ஃபிலிப், இஷ் சோதி, டாம் கரன், டார்ஷி ஷார்ட், டேவிட் பெய்ன், கார்லஸ் பிராத்வெயிட் உள்ளிட்டோர் 75 லட்சம் ரூபாய் பட்டியலிலும்,  அஜிங்க்யா ரஹானே, சிக்கந்தர் ராஸா, ஒடீன் ஸ்மித், லிட்டன் தஸ், குசால் மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலை கொண்ட பிரிவிலும் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *