அதிமுக செயற்குழு கூட்டம் நாளை(7ம் தேதி) நடப்பதாக இருந்தது. பின்னர் அது திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் 16ம் தேதி(ஞாயிறு) நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். கூட்டத்துக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டி, உறுப்பினர் சேர்க்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
