கோவை , பொள்ளாச்சி நகரத்தில் மட்டும் உள்ள 162 ரேசன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை பொள்ளாச்சி குமரன் நகர் 14,15,16வது வார்டில் உள்ள ரேசன் கடைகளில் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்கள் இந்த
பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவதாகவும், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ஸ்வீட் நாகராஜ்,கவிதா,வார்டு செயலாளர்கள் ஜெகதீஷ்,ஜெயநலாபுதீன்,பஷீர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.