கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் நாராயணசாமி. இவர் வீட்டு மனை பிளாட்டுகள் விற்பனை செய்து வருகிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு போலியான வரைபடம் மூலமாக விளாங்குறிச்சி ராமகிருஷ்ணா லே-அவுட் உள்ள பார்க் சைட் 36 செண்டை அபகரித்துள்ளார். இதனை அடுத்து கோவை மாநகராட்சி கடந்த மூன்று முறை நாராயணசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீசுக்கு பதிலளிக்காத நாராயணசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கோவை
மாநகராட்சி ஜேசிபி வாகனம் மூலம் 36 சென்ட் இடமும் அதற்குள் கட்டப்பட்ட இரண்டு சென்ட் வீடு தரைமட்டம் ஆக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் மொத்த மதிப்பு 16 கோடி ரூபாய் எனக் கூறப்படும். இந்த நிலையில் நாராயணசாமி இதே போல போலியான ஆவணங்கள் தயாரித்து வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுபட்டாரா என சரவணம்பட்டி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.