150 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் வேலை வேண்டிய இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தகவல்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டகலெக்டர் தங்கவேல் தலைமையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அவர்கள் தெரிவித்ததாவது….
கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 19.10.2024 அன்று தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் அரசு துறைகள் சார்பாக 10 பல் துரை கண்காட்சி அரங்குகள் அமைய உள்ளது. மேலும் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளார்கள்.
எனவே இளைஞர்களுக்கு இச் செய்தியினை தெரிவித்து அதிக அளவில் கலந்து கொள்ள வைக்கவும். கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் முகாமில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுப்பது குறித்தும், அனைத்து கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு மாணவர்கள் கலந்து கொள்ள அறிவுரை வழங்கவும், வேலை வழங்குவோர்,வேலை நாடுனவர்களுக்கு முகாம் நடைபெறும் நாளில் உரிய இடத்திற்கு வழி காட்டவும். முகாம் நடைபெறும் நாட்களில் மருத்துவ முதலுதவி மையம், அவசர கால ஊர்தி, தீத்துடுப்பு வாகனம். குடிநீர் வசதி கழிவறை வசதி, மாற்றுத் திறனாளிகள் அதிக அளவில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுதல், அவர்கள் முகாமிற்கு வந்து செல்ல ஏதுவாக சர்க்கரை நாற்காலி வசதிகள் ஏற்பாடு செய்தல், போதிய போக்குவரத்து வசதி ஏற்படுத்துதல், தடையில்லா மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொண்டு இந்த மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் சிறப்பாக நடந்திட தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ் செல்வன். கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.