பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அருகில் உள்ள இந்திரா நகரில் வசிக்கும் கணேசன் என்பவரின் 15 வயது மகன் ரோஹித் ராஜ், இந்திரா நகரில் உள்ள பெட்டி கடை ஒன்றில் தனது தம்பிகளுடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு மதுபோதையில் வந்த அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பவரின் மகன் சீனிவாசன் என்ற நபர் ரோஹித்ராஜை இந்திரா நகர் அங்காளம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள பொதுக்கழிப்பிடத்திற்கு சிறுவனை அழைத்து சென்ற சீனிவாசன் அவனது நண்பர்கள் சிலர் மதுபாட்டிலை உடைத்து சிறுவனின் கழுத்தை அறுத்து நெஞ்சில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். சிறுவன் அங்கிருந்து வெளியே ஓடி வந்து நடுரோட்டில் விழுந்து இரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்துள்ளான். அருகில் இருந்தவர்கள் பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மீதமுள்ள குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் போலீசார்.
15 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை…. பெரம்பலூரில் பரபரப்பு…
- by Authour
