முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்ததையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரூ.44,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வாகன தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் செம்கார்ப் நிறுவனம் புதிய ஆலையை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் ரூ.1707 கோடி மதிப்பில் மில்கி மிஸ்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். * புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி உள்ளிட்ட கொள்கைகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்டத்தில் செம்கார்ப் நிறுவனம் புதிய ஆலையை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. *
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள பாக்ஸ்கான் ஆலை தொழிலாளர் தங்கும் விடுதியை வரும் 17ம் தேதி முதல்வர் தி்றக்கிறார். இது 206 கோடியில் கட்டப்பட்டது. இதில் 18 ஆயிரம் பேர் தங்குவதற்கு படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.