தஞ்சை மாவட்டம் ராயப்பேட்டையில் இருந்து திருவையாறு பகுதியில் ஆட்டோவில் வாழைத்தார் ஏற்றி வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ மீது பதினைந்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பயணம் செய்து வந்துள்ளனர். மேலும் செல்போன் பேசியபடி ஓட்டுனர் ஆபத்தான நிலையில் வாகனம் ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறியதோடு மூன்று பிரிவுகளில் அபராதம் விதித்துள்ளனர்.