மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக இன்று காலை 9.00 மணியளவில் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பாண்டமங்கலம், தென்னூர் அரசமரம், தென்னூர் ஹைரோடு, அரசு மருத்துவமனை, மன்னார்புரம், மிளகுபாறை உறையூர், ஜெயந்தி பேருந்து நிறுத்தம், டாக்கர் ரோடு, குறத்தெரு, உள்ளிட்ட 15 இடங்களில் புதியகொடி கம்பங்களில் கட்சிக் கொடியை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருச்சி மேற்கு மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா கொடிகளை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து திருச்சி மேற்கு மாவட்டம், மணப்பாறை நகரத்தின்
சார்பில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியை ஏற்றி வைத்தும், அரசு தலைமை மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பள்ளி, கல்லூரி வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டும், மணப்பாறையில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகங்களில் உணவு வழஙகப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, மாவட்ட பொருளாளர் ஹுமாயூன்கபீர், மாவட்ட துணைத்தலைவர் அக்பர்பாஷா, மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் சமது, அசாரூதீன், அஹமதுல்லா, அப்துல் ரஹ்மான், ஹுமாயூன்கபீர், அப்துல் சமது, மணப்பாறை நகர நிர்வாகிகள் அக்பர்பாஷா, சபூர்அலி, சீமாசாகுல், கிரீன் இக்பால் மற்றும் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், பகுதி கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.