கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் விற்ற கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன், கோவிந்தராஜின் மனைவி விஜயா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிபதி ஸ்ரீராம் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்களுக்கு மெத்தனால் விற்ற சின்னதுரை என்பவரை நேற்று போலீசார் பண்ருட்டியில் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரிக்கிறார்கள்.