திருச்சி தென்னூர் ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்தவர் அஷ்ரப் அலி (48). மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர். இவரது மகன் பாகா என்பருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது யுவாஸ், ஷேக், அஷ்ரப் உள்ளிட்ட சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் முகமது யுவாஸ் தரப்பினர் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதில் அஷ்ரப்அலி, அவரது 2 சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டன. இது தொடர்பாக தில்லைநகர் போலீசார் வழக்குப் பதிந்து, யுவாஸ், ஷேக், அஷ்ரப் உள்ளிட்ட 5 பேரை நேற்று முன்தினமும் மேலும் 10 பேரைநேற்றும்கைது செய்தனர்.