Skip to content
Home » ரூ.15.27 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி

ரூ.15.27 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு என்.எஸ்.கே நகர் பகுதியில் சுகாதார வளாகம் திறப்பு விழா, காமதேனு நகர் வழியாக மோகனூர் செல்லும் இணைப்பு சாலை திறப்பு விழா, காமராஜ் சாலையில் அங்கன்வாடி மையம், மழைநீர் வடிகால் அமைத்தல், நியாய விலை கடை திறப்பு விழா என 15 கோடியே 27 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கான துவக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில்,

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

குறிப்பாக வெங்கமேடு என்.எஸ்.கே நகர் பகுதியில், சுகாதார வளாகத்தை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து அரசுத்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பெண்கள், மாற்றுத்திறனாளி மாணவர் உட்பட பொதுமக்கள் பலர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.