இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னையில் வண்ணாரப்பேட்டை, தி.நகர், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், அடையாறு உடப்ட 12 காவல் மாவட்டங்களில் உள்ள 132 காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த நுண்ணறிவு பிரிவு காவலர்களை பணியிட மாற்றம் செய்து காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த நுண்ணறிவு காவலர்களை அதே மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.