13 வயது…….சாதனை நாயகன் சூர்யவன்ஷி
ஐபிஎல் கிரிக்கெட்டில் 13 வயது வீரர் ஒருவர் இடம் பிடித்து உள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த வீரர் உலக சாதனையுடன் கிரிக்கெட் களத்தில் காலடி வைத்து உள்ளார். யார் அவர், ….. என்ன சாதனை படைத்துள்ளார் என்பதை பார்க்கலாம் ….. வாங்க…..
கிரிக்கெட்……..இது ஒரு விளையாட்டு என்று கடந்த போய் விட முடியாது. இன்று 20க்கும் மேற்பட்ட நாடுகளில் முதல்தர கிரிக்கெட் விளையாடப்படுகிறது. கிரிக்கெட் தோன்றியது இங்கிலாந்தாக இருக்கலாம். ஆனால் இன்று கிரிக்கெட்டின் தாயகமாக திகழ்வது இந்தியா தான்.
இந்திய மக்களில் சரிபாதி பேர் கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் எங்கு நடந்தாலும் கிரிக்கெட் ரசிகர்கள் கூடுகிறார்கள். ரசிகர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்த கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் தவிர, ஐபிஎல், டிஎன்பிஎல் என்று பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது.
இந்திய இளைஞர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது என்பது லட்சிய கனவாக இருக்கிறது.
கிரிக்கெட்டின் கடவுள் என இந்திய ரசிகர்கள் போற்றும் சச்சின் டெண்டுல்கர், 15 வயது மற்றும் 230 நாட்களாக இருந்தபோது இந்திய கிரிக்கெட்டில் காலடி பதித்தார்.
யுவராஜ் சிங் 15 வயது, 57 நாட்களாக இருந்தபோது கிரிக்கெட்டில் நுழைந்தார்.
ஆனால் இப்போது ஒரு இந்திய வீரர் 13 வயதிலேயே ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 1 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு இவர் ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளார். பீகார் மாநிலம் சமஸ்டிபூர் அருகே உள்ள தாஜ்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அந்த வீரர் பெயர் வைபவ் சூர்யவன்ஷி. இவா் இடது கை பேட்ஸ் மேன். உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் 13 வயதில் முதல்தர கிரிக்கெட் அணியில் இடம் பிடித்ததில்லை. அந்த சாதனையை இந்திய வீரர் சூர்யவன்ஷி தனதாக்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்.
சூர்யவன்ஷி சமீபத்தில் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் இளம் வயதில் அரைசதம் அடித்தார். அவர் யூத் டெஸ்ட் போட்டியில் சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெறும் 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். அவரது செயல்திறன் பதிவு செய்யப்பட்ட அனைத்து 19 வயதுக்குட்பட்ட டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு இந்தியரின் அதிவேக சதம் என்ற சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
சூர்யவன்ஷியின் கிரிக்கெட் பயணம் 12 வயதில் ரஞ்சி கோப்பையில் அறிமுகமானபோது தொடங்கியது. அவர் பீகார் அணிக்காக விளையாடினார் மற்றும் இப்போட்டியில் போட்டியிடும் இளம் வீரர் ஆனார். 2026ல் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் சூர்யவன்ஷி நிச்சயம் இடம் பிடிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இளம் வயதிலேயே கிரிக்கெட்டில் அறிமுகமாகி உள்ள சூர்யவன்ஷி நிச்சயம் இன்னொரு டெண்டுல்கராக இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என நம்பலாம். ஆனால் சூர்யவன்ஷி…. தனக்கு பிடித்தமான வீரர் மேற்கு இந்திய தீவு அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா என்கிறார். வன்ஷி மேலும் மேலும் சாதனைகள் படைக்க நாமும் வாழ்த்துவோம்.