ஸ்ரீரங்கம் மேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (26).இவர் நடந்து சென்ற போது மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கத்திய காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 500 ரூபாயை பறித்துக்கொண்டு ஓடி விட்டார். இது குறித்து அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.
திருச்சி ஜெயில் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ( 22). இவர் கூலி தொழிலாளி. இவர் காந்தி மார்க்கெட் பழைய மீன் மார்க்கெட் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் திருச்சி வரகனேரியை சேர்ந்த ஜாக்கிஜான் (29), மாடசாமி (22) ஆகிய 2 பேர் கத்தி முனையில் ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு எஸ்கேப் ஆகினர். இச்சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் திருச்சி பாலக்கரை பகுதியில் கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்தாக நவநீதகிருஷ்ணன் ( 27 ), ஜஸ்டின் கிறிஸ்தவராஜ் (24), விமல்ராஜ் (24), ஆசாத் முகமது (21) ஆகிய 4 பேரை பாலக்கரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் கத்தி முனையில் 1000த்தை பறித்தாக தங்கமணி (35) என்பவரை பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். உறையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தனபால் (26), நவீன் குமார் (19), ஆகிய 2 பேரையும், திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாண்டி ( 32) என்ற வாலிபரையும் கத்தி முனையில் பணத்தை பறித்ததாக போலீசார் கைது செய்தனர் . எனவே திருச்சியில் ஒரே நாளில் 13 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு வழிப்பறி,திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.