Skip to content
Home » 13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..

13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ஷிகபூல் என்ற மருத்துவமனைக்கு மெட்ரோ மூலம் கொண்டு சென்றனர்.

அவசர மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் மனித உறுப்புகள் பொதுவாக ஆம்புலன்ஸ்கள் மற்றும் விமானங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், ஹைதராபாத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு மெட்ரோவை தேர்வு செய்தது லக்ஷிகபூல் மருத்துவமனை மருத்துவர்கள்.

இதய பரிமாற்றம் தாமதமாக கூடாது என்ற நோக்கத்தில் மெட்ரோ ரயிலில் அனுப்பப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் இதயத்தை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக மெட்ரோ தரப்பில் இருந்து சிறப்பு ஏற்பாடு செய்துக்கொடுக்கப்பட்டது.

அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில், தானமாக பெறப்பட்ட இதயம் மெட்ரோ மூலம் எல்பி நகர் காமினேனி மருத்துவமனையில் இருந்து ஹைதராபாத் மெட்ரோ ரயில் பசுமை வழிச்சாலை வழியாக லக்திகாபூல் குளோபல் மருத்துவமனைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.

இதன் மூலம், 13 கி.மீ தூரத்தை கடந்து, தக்க சமயத்தில் இதயத்தை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். இதையடுத்து, மெட்ரோ ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.