Skip to content

பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் பலி

பீகாரில் பல மாவட்டங்களில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளது. குறிப்பாக மின்னல் தாக்கியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 5 பேர் பலியாகினர். தர்பங்காவில் 4 பேர், மதுபானியில் 3 பேர் மற்றும் சமஸ்திபூரில் ஒருவர் என ஒரே நாளில் 13 பேர் பலியாகினர்.

இறந்தவர்களின் குடும்பத்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் அறிவுரைகளை பின்பற்றுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!