தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் பேட்ஜ் அணிந்து சபைக்கு வந்தனர். அப்போது கோர்ட்டில் உள்ள ஒரு பிரச்னையை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்டார். அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. கோாட்டில் உள்ள பிரச்னை குறித்து இங்கு பேச அனுமதி இல்லை என்றார். இதைத்தொடர்ந்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
பேட்ஜ் இல்லாமல் அவைக்குள் அதிமுகவினர் வரலாம் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். பேட்ஜ் இருந்தால் வெளியேற்றப்படுவீர்கள் என சபாநாயகர் கூறினார். அப்போதும் பேட்ஜ் உடன் வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், செந்தில்குமார். பாலசுப்பிரமணியன், மரகதம் குமாரவேல் உள்பட 13 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.