Skip to content

சட்டீஸ்கரில் 14 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டர்

சட்டீஸ்கர் மாநிலம் ஹரியபெண்ட் மாவட்டத்தில் ஒடிசா எல்லையையொட்டிய வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அங்கு  எஸ்.டி.எப்.  பாதுகாப்பு படையினர்  சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து  பாதுகாப்பு படையினரும் என்கவுன்டர் செய்தனர்.

இன்று அதிகாலை வரை துப்பாக்கி சண்டை நீடித்தது. இந்த என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் தலைக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டும் அடக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த என்கவுன்டரின்போது பாதுகாப்புப்படை வீரர் ஒருவரும்  காயமடைந்தார்.

 

கடந்த மாதம் சட்டீஸ்கரில் 15 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.