Skip to content

கரூர் வழியாக மதுரை சென்ற பஸ்சில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்… 5 பேர் கைது..

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கரூர் நகர காவல் எல்லைக்குட்பட்ட கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையில் தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சேலத்தில் இருந்து மதுரை சென்ற பேருந்தை சோதனை செய்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு டிராவல் பேக்

இருந்துள்ளது. அதில் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதனுடைய மதிப்பு 1,20,000 எனக் கூறப்படுகிறது.

மேலும் அந்த பேருந்தில் சந்தேகத்திற்கு இடமாக பயணம் செய்த ஐந்து பேரை பிடித்து விசாரித்ததில், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியை சேர்ந்த நாகேந்திரன் என்கிற ரகு 29, ராம்குமார் 24, மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் 24, யோகேஸ்வரன் 20, நவீன்ராஜ் 20 ஆகியோர்களை பிடித்து மேற்கொண்ட விசாரனையில் கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கி கொண்டு ரயில் மூலம் சேலம் வரை வந்துவிட்டு அங்கிருந்து பேருந்து மூலமாக மதுரை கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 12 கிலோ கஞ்சாவை கைப்பற்றி அவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மீது மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!