சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டில்லி, ஷீரடி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 12 விமான சேவைகள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து டில்லி செல்லும் 4 விமான சேவையான இண்டிகோ ஏர்லைன்ஸ், ஷீரடிக்கு செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானமும், ஐதராபாத் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் செல்வது, வருவது என மொத்தம் 12 விமான சேவைகள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். ஏன் விமானம் ரத்து செய்யப்பட்டது என விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.