பிளஸ்1 தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா இதனை வெளியிட்டார். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 90.94% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07% தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட0. 87% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணக்கு பாடத்தில்17 பேர் 100க்கு 100 மார்க் பெற்று உள்ளனர். தமிழில் 9 பேரும், ஆங்கிலத்தில் 13 பேரும் சென்டம் பெற்றுள்ளனர்.
விலங்கியலில் 34 போ் , தாவரவியல் 15, உயிரியல் 65, இயற்பியல்440பேர் 100க்கு 100 மார்க் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய 7 லட்சத்து 76ஆயிரத்து 844 மாணவ மாணவிகளில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளில் மாநில அளவில் திருப்பூர் முதலிடம், ஈரோடு 2ம் இடம், கோவை 3ம் இடம் பிடித்தது. முதல் மூன்று இடங்களையும் கொங்கு மண்டலமே பெற்று சாதித்து உள்ளது. கடைசி இடத்தை ராணிப்பேட்டை மாவட்டம் பிடித்துள்ளது.