Skip to content

புதுகை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

  • by Authour

தமிழ்நாட்டில் 11  மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக   ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி  எந்தெந்த மாவட்டங்களுக்கு யார், யார்  கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வருமாறு:

திருப்பத்தூர்-  பிற்பட்டோர் நலத்துறை செயலாளர் வி.  விஜயராஜ் குமார்,

திண்டுக்கல்-   வணிகவரித்துறை செயலாளர் பிரஜேந்திர நவ்நித்,

சென்னை_   சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன்,

திருவண்ணாமலை-  பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி,

தூத்துக்குடி- தொழிலாளர் நலத்துறை செயலாளர் . கே. வீரராகவ ராவ்.

கள்ளக்குறிச்சி-  கைத்தறித்துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ்,

திருப்பூர்- கடல்சார் வாரியத் துணைத்தலைவர்  எம். வள்ளலார்,

கோவை- மனித வள மேம்பாட்டுத்துறை  செயலாளர்  நந்தகுமார்,

புதுக்கோட்டை-  வேலைவாய்ப்புத்துறை ஆணையர் சுந்தரவல்லி்

நாமக்கல்-  சிறுபான்மையினர் நலத்துறை  இயக்குனர் ஆசிய மரியம்.

நாகப்பட்டினம்-  தமிழ்நாடு உப்பு வாரிய  நிர்வாக இயக்குனர்  சி. என். மகேஸ்வரன்,

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும்,

இயற்கைப் பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்தந்த  மாவட்டங்களில்  மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  அரசு அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!