Skip to content
Home » கரூர் பள்ளப்பட்டியில் நிதிநிறுவனம் மோசடி…… 1000 பவுன் நகைகளை இழந்த மக்கள்

கரூர் பள்ளப்பட்டியில் நிதிநிறுவனம் மோசடி…… 1000 பவுன் நகைகளை இழந்த மக்கள்

  • by Senthil

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மணப்புரம் கோல்ட் லோன் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, மண்மாரி, வேலம்பாடி என சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர்.

2022 ஆண்டு மணப்புரம் ஷேர் scheme மூலம் ஒரு பவுன் நகைக்கு 2000 ரூபாய் மாதம் தோறும் பங்குத்தொகை கிடைக்கும் என மணப்புரம் நிர்வாகத்தில் உள்ளவர்கள் வீடு வீடாக சென்று நகை பெற்று உள்ளனர் . 120 வாடிக்கையாளர்கள் இதை நம்பி
சுமார் 1050 பவுனுக்கு மேல் தங்க நகைகளை மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இதன் மதிப்பு ஐந்து கோடிக்கு மேல் இருக்கும் என  கூறப்படுகிறது.

2022ல் ஒரு பவுனுக்கு மாதம் தோறும் ரூ 2000 கொடுத்த நிர்வாகம் இரண்டாம் ஆண்டான 2023 ல் ரூ 500 கூடுதலாக சேர்த்து மாதம் தோறும் 2500 ரூபாய் வழங்கி உள்ளனர். இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு வழங்க வேண்டிய பங்குத்தொகை வாடிக் நிதி நிறுவனத்துக்கு  சென்று விசாரித்துள்ளனர். நிதி நிறுவன ஊழியர்கள் சரியான பதில் தராமல் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனால், நம்பிக்கை இழந்த வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த தங்க நகைக்கு உத்தரவாதம் இல்லை என அறிந்து   நகையை திருப்பி கேட்டு நிதி நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக முறையிட்டனர்.
நிதி நிறுவன ஊழியர்கள் மாறி மாறி பதிலளித்தார்களே தவிர, நகை எங்கே என்ன ஆனது என்பதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் கேரளாவில் உள்ள மணப்புரம் தலைமை அலுவலகம் சென்று கேட்ட போது தங்கள் நகைக்கு உரிய பணம் செலுத்தி பெற்று கொள்ளுமாறு தெரிவித்து உள்ளனர்.

இதனால்  ஆத்திரமடைந்த பொதுமக்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!