கொச்சியில் இருந்து கோவை கணபதி பகுதியில் உள்ள எரிவாயு குடோனுக்கு 18 டன் கொள்ளவுடன் டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் லாரி கோவை அவிநாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் எறி வரும் போது எதிர்ப்பாராத விதமாக, லாரிக்கும் டேங்கருக்கும் இடையேயான இணைப்பு துண்டானது. இதனால் தனியாக பிரிந்த டேங்கர் மேம்பாலத்தின் மீது கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. மேலும் டேங்கரில் இருந்து எரிவாயு கசிய தொடங்கிய நிலையில் லாரி ஓட்டுநர் இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிவாயு டேங்கரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கோவை மாவட்ட போலீசார் பொதுமக்கள் அருகில் செல்லாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அவிநாசி சாலை மேம்பாலம் மாநகரின் முக்கிய சாலைகள் சந்திப்பாக இருப்பதன் காரணமாக போக்குவரத்தை மேம்பாலத்தில் தடை செய்து
உள்ள போலீசார், போக்குவரத்தில் மாற்றம் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கோவை மாவட்ட ஆட்சியரும் மாநகர காவல் ஆணையாளரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். 500 மீட்டர் சுற்றளவுக்கு போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு பள்ளிகளுக்கும் ஆட்சியர் விடுமுறை அறிவித்தார். அதோடு அந்த பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் எரிவாயு கசிவை தடுப்பதற்கான மேற்கொண்டு கசிவை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து திருச்சியில் இருந்து டேங்கரை லிப்ட் செய்வதற்கான , (emergency response) வாகனம் கொண்டுவரப்பட்டு, 10 பேர் கொண்ட குழு நவீன கருவிகளின் மூலம் எல்.பி.ஜி கேஸ் கசிவு உள்ளதா என்பதை ஆய்வு செய்து கிரேன்களின் உதவியுடன், emergency response வாகனத்தில் ஏற்றப்பட்டு, டேங்கர் லாரி புறப்பட்டது. சைரன் வாகனங்கள் முன்னே செல்ல, 4 தீயணைப்பு வாகனங்கள், 2 ஆம்புலன்ஸ்கள் பின்தொடர டேங்கர் லாரி தற்போது எல்பிஜி பிளான்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மேலும் டேங்கர் லாரியின் கான்வாய் புறப்பட்டது… சைரன் வாகனங்கள் முன்னே செல்ல, 4 தீயணைப்பு வாகனங்கள், 2 ஆம்புலன்ஸ்கள் பின்தொடர டேங்கர் லாரி சென்று கொண்டிருக்கிறது.