Skip to content

11 தாசில்தார்கள் மாற்றம்… அரியலூர் கலெக்டர் அதிரடி

அரியலூர் மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் கீழ் தனி வட்டாட்சியராக பணியாற்றிய முத்துலெட்சுமி, அரியலூர் வட்டாட்சியர் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெயங்கொண்டம் ஜே எல் பி பி தனி வட்டாட்சியர் ராஜமூர்த்தி, ஆண்டிமடம் வட்டாட்சியராகவும், அரியலூர் கோட்ட கலால் அலுவலர் சம்பத், உடையார் பாளையம் வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், ஜெயங்கொண்டம் ஜே.எல்.பி.பி தனி வட்டாட்சியராகவும், அரியலூர் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அருட்செல்வி, அரியலூர் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும், உடையார்பாளையம் வட்டாட்சியர் கலிலூர் ரகுமான், ஆண்டிமடம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டனர்.

அரியலூர் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் தேவகி, அரியலூர் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியராகவும், அரியலூர் அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் கோவிந்தராசு, அரியலூர் கோட்ட கலால் அலுவலராகவும், ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை 45 சி தனி வட்டாட்சியர் கண்ணன், அரியலூர் அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியராகவும், ஆண்டிமடம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுசிலா, அரியலூர் டான்சம் தனி வட்டாட்சியராகவும், அரியலூர் டான்சம் தனி வட்டாட்சியர் கதிரவன், ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை 45c தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!