Skip to content
Home » கோவை அருகே ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரரின் 10ம் ஆண்டு குருபூஜை…

கோவை அருகே ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரரின் 10ம் ஆண்டு குருபூஜை…

  • by Authour

கோவை சங்கனூர் அருகே உள்ள கிரிநாத் திருமண மண்டபத்தில் ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரரின் குருபூஜை விழா இன்று நடைபெற்றது விழாவை ஒட்டி காலை முதல் ஆனந்த குருபூஜை காயத்ரி மந்திர உபர உபதேசம் கங்கை இராமேஸ்வர தீர்த்தம் மற்றும் ருத்ராட்ச பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக 1008 வலம்புரி சங்குடன் 1008 ஸ்படிகலிங்கமும் வைத்து பூஜித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது மேலும் மரகதலிங்கத்திற்கு அபிஷேகமும் நடைபெற்றது மேலும் பிரம்மரிஷி விசுவாமித்திரரின் உருவ சிலைக்கு

ருத்ராட்ச அபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விசுவாமித்திரரின் உபதேசங்கள் அவரின் வரலாறு போன்ற சொற்பொழிவை கேட்டு மெய்சிலிர்த்தனர் அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியில் நடைபெற்றது.