தமிழக முழுவதும் அண்மையில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நாளை 234 சட்டமன்ற தொகுதியில் நடிகர் விஜய் சென்னையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பாராட்டி பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் முழுவதும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதியில் 10 மற்றும் 12ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற ஆறு மாணவ,மாணவிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை அரவக்குறிச்சி ஒன்றிய தளபதி விஜய் மக்கள் இயக்கம்
ஒன்றிய தலைவர் சதீஷ் தலைமையில் பெற்றோர்கள் மற்றும் மாணவ,மாணவிகளிடம் வழங்கினர். அடையாள அட்டை வழங்கப்பட்டவர்களுக்கு சென்னைக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளை அரவக்குறிச்சி ஒன்றிய மக்கள் இயக்க நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இரவு அனைவரும் கரூர் மாவட்டத்தில் இருந்து பேருந்து மூலம் சென்னையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளனர்.