நாகையில் 10,ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த பள்ளி மாணவ, மாணவிகளை, ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று தேர்வு அறைக்கு ஆசிர்வதித்து அனுப்பி வைத்தனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி, ஏப்ரல் 8,ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில் நாகை மாவட்டத்தில்
4129,மாணவர்களும், 4297 மாணவிகள் என 8426 பேர் 42 தேர்வு மையங்களில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர். இதற்காக இன்று நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளிக்கு வந்த பள்ளி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் தேர்வை எவ்வித ஐயமும் இன்றி எதிர்கொள்ள அறிவுரை வழங்கி ஆசிரியர்கள், அவர்களை தேர்வு மையத்திற்கு ஆசிர்வதித்து அனுப்பி வைத்தனர். அங்கு பள்ளி மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வினை ஆர்வத்துடன் எழுதினர்.