தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் அருகே சின்னகனவாய் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்-தீனா தம்பதியருக்கு முதலாவதாக பெண் குழந்தையும். அதனை தொடர்ந்து 2007 ம் ஆண்டு இரண்டாவதாக இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. கிருஷ்ணன் தம்பதியினர் கூலி வேலை செய்து வந்தாலும் முதலில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் உள்பட 3 மகள்களையும் அங்குள்ள அரசு பள்ளியில் தொடர்ந்து படிக்க வைத்து வந்தனர். இந்நிலையில் இரட்டையர்களான ராமதேவி, லட்சுமி தேவி இவர்கள் இருவரும் தொப்பூர் அருகே உள்ள தொ.காணிகரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவிகள் இருவரும் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. ஒரே நாளில் பிறந்த இருவருக்கும் நேற்றைய தேர்வு முடிவுகளில் இதில் அதிசயதக்கும் விதமாக ஒரே நாள் பிறந்த இரட்டையர் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 347 ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர். பொதுமக்களும் அவர்கள் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகள், ஆசிரியர்கள் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர் மாணவிகளுக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.