Skip to content
Home » 10ம் வகுப்பு ரிசல்ட்… பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

10ம் வகுப்பு ரிசல்ட்… பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

10ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது.  வழக்கம் போல இந்த ஆண்டும் பெரம்பலூர் மாவட்டம் (97.67%) தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது.  2ம் இடத்தை சிவகங்கை மாவட்டமும்(97.53%), 3ம் இடத்தை விருதுநகரும்(96.22%) பெற்றுள்ளது.

கன்னியாகுமரி  மாவட்டம் 95.99% தேர்ச்சி பெற்று 4வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்டம்  95.58% தேர்ச்சி பெற்று 5வது இடத்தையும் பிடித்தது.

12,638 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதினர். இதில் 3,718 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 1026 அரசு பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

அரசு பள்ளிகள் 87.45%, அரசு உதவிபெறும் பள்ளிகள் 92.24%,  தனியார் பள்ளிகள் 97.38% தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வெழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!