கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 188 பள்ளிகளைச் சார்ந்த 5891 மாணவர்கள், 5890 மாணவிகள் என மொத்தம் 11,781 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.
இதில், 5200 மாணவர்கள், 5579 மாணவிகள் என மொத்தம் 10,779 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.49 சதவிதமாகும்.
இதில், மாணவர்கள் 88.27% தேர்ச்சியும், மாணவிகள் 94.72% தேர்ச்சி
பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சி விகிதம் 20வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 83 சதவிதமாகும். இந்த ஆண்டு 91.49 சதவிதம் பெற்றுள்ளது.