தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன், அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியுடன், கடந்த 2023ம் ஆண்டு, இன்ஸ்டகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், மாணவியின் வீட்டிற்கு சென்ற, மாணவன் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைக் கூறி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாளுக்கு முன்பு, சிறுமிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. மாணவியை அவரது பெற்றோர், ஒரத்தநாட்டில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது, மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து மாணவியிடம் விசாரித்த போது, மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டது தெரிந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார், மாணவன் மீது போக்சோ சட்டத்தில், வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். மேலும், மாணவியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…… தஞ்சையில் +2 மாணவன் போக்சோவில் கைது….
- by Authour
