தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், இராஜகிரியில் 2023ம் ஆண்டு பொதுத்தேர்வில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் பாபநாசம் வட்டார அளவில் அதிக மதிப்பெண்களை பெற்ற பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பாபநாசம் வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு அப்துல் பாசித் பைஜி தலைமை தாங்கினார். யூசுப் அலிபாய் முன்னிலை வகித்தார். முகமது இஸ்மாயில் ஜெய்னி அனைவரையும் வரவேற்றார். முகமது இல்யாஸ் மிஸ்பாஜி நிகழ்ச்சியை தொகுத்து
வழங்கினார். நூருதீன் மிஸ்பாகி மற்றும் சாஹுல் ஹமீது பைஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முஹம்மது இல்யாஸ் சிறப்புரையாற்றினார். விழாவில் பாபநாசம் பகுதிகளில் உள்ள 21 பள்ளிகளில் இருந்து 117 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பாபநாசம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி அப்துல் கனி பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஹாபிஸ் அப்துல் மகீது நூரானி, ரஹ்மத்துல்லாஹ் இன்ஆமி, வட்டார தலைவர், செயலாளர், பொருளாளர், மாணவ-மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என பல கலந்து கொண்டனர். முடிவில் முகமது இப்ராஹிம் ஹைரீ நன்றி கூறினார்.