திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன் (61), இவர் கடந்த வாரம் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற பொது 10 ரூபாய் நாணயங்கள் 10,000 ரூபாய் எடுத்து சென்றார் அப்போது அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறும்போது…
‘ரிசர்வ் வங்கி பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று அறிவித்துள்ளது. ஆனால், வங்கிகள் பேருந்துகள், மற்றும் வெளியிடங்களில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் பத்து ரூபாய் நாணயங்களாக கொண்டு சென்றேன் ஆனால் என்னை திருப்பி அனுப்பி விட்டனர் என தெரிவித்தார் .
இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பேருந்துகளில் 10 ரூபாய் நாணயம் வங்க வேண்டும் அப்படி வாங்க மறுத்தால் மூன்று ஆண்டு சிறை தண்டனை என அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து நடத்துனர்கள் நாணயங்களை வாங்குகின்றனர் . ஆனால் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். இதனால் பொதுமக்களும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும். அதே போல வங்கிகள் சில 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர் அவர்களும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.