108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி மாதம் 8ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர், இந்நிலையில், அதற்கான ஆயத்த கூட்டத்தை, மயிலாடுதுறையில் நடத்தினர். மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமயில், நடைபெற்ற கூட்டத்தில்,, மாநில பொதுச்செயலர் ராஜேந்திரன், மாநில செயலாளர்கள் காளிதாஸ்,பாஸ்கரன், மாநில பொருளாளர் சாமிவேர், மாநில தலைவர் வரதராஜ் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு, 12 மணிநேர வேலையை, 8 மணிநேரமாக குறைக்க வேண்டும். வாரவிடுமுறை நாட்களில், நிறுத்தப்படும் ஆன்புலன்ஸ் சேவையை, இயக்க வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில், பாதிக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் பழுது அடைந்துள்ளதை சீரமைத்துகொடுக்க வேண்டும், 1353 ஆம்புலன்ஸ்கள், அனைத்தையும், இயக்க வேண்டும். குறைவான வாகனத்தை வைத்துக்கொண்டு போலி கணக்குக் காண்பித்து பணியாளர்களை கசக்கிப் பிழிவதைக் கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.