Skip to content
Home

சென்னை மெட்ரோ ரெயிலில்  பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி 13-ந்தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 464 பேர் பயணம் செய்தனர். அதிகபட்சமாக சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 21,731 பேரும், கிண்டியில் 14,649 பேரும், திருமங்கலத்தில் 13,607 பேரும், விமான நிலையத்தில் 12,909 பேரும் பயணித்தனர். 14-ந்தேதி போகிப்பண்டிகை அன்று 1 லட்சத்து 62 ஆயிரத்து 525 பேரும், 15-ந்தேதி பொங்கல் நாளில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 160 பேரும், 16-ந்தேதி மாட்டு பொங்கலில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 167 பேரும் பயணம் செய்துள்ளனர். 17-ந்தேதி காணும் பொங்கலில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 399 பயணிகளும் என 4 நாட்களில் மொத்தம் 8 லட்சத்து 36 ஆயிரத்து 745 பேர் பயணம் செய்துள்ளனர்.  மெட்ரோ நிர்வாகம் இதை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *