Skip to content

காஷ்மீரி்லிருந்து ஒரேநாளில் வௌியேறிய 10,090 சுற்றுலா பயணிகள்

பயங்கரவாத தாக்குதல் நடந்த காஷ்மீரில் இருந்து ஒரேநாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேறினர்.

கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடந்த காஷ்மீரில் இருந்து ஒரேநாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேறினர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து 10,090 பேர் வெளியேறிய நிலையில் 4,107 பேர் வருகை புரிந்தனர் ஸ்ரீநகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 110 விமானங்கள் இயக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!