கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள 10 நெம்பர் முத்தூரில் காராள வம்ச கலை சங்கம் குழு சார்பில் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம் குறித்து இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்,சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், பெண்கள் உடல்நலத்துக்காகவும் வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி மற்றும்
சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் கலந்து கொண்டு முருகபெருமான், வள்ளி திருமணம் போன்ற பாரம்பரிய கதைகளை நினைவு கூரும் வகையில் வள்ளி கும்மி நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.