Skip to content
Home » 100 புதிய பஸ் சேவை… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

100 புதிய பஸ் சேவை… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

தமிழகத்தில் 1666 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இதன் முதற்கட்டமாக 100 புதிய பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 20) சென்னை, மாநகர போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 634.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 1666 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதன் முதற்கட்டமாக 100 BSVI பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *