அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே சிந்தாமணி பெட்ரோல் பங்க் அருகே கீழமைக்கல்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைக்கு வந்துள்ளனர்.
சிந்தாமணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆறாவது வார்டில் கீழ மைக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த வாரம் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டதாகவும், அருகாமையில் உள்ள பஞ்சாயத்து மற்றும் வார்டுகளில் நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் வரை சம்பளம் வழங்குவதாக கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு ஊராட்சி அலுவலர்கள் மற்றும் தா.பழூர் காவல்துறையினர் யாரும் வராததால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தங்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் விசாரணை
நடத்தியதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் தா.பழூர் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் கும்பகோணம் -அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.