100 நாள் சம்பள பாக்கியம் வழங்க கோரி மயிலாடுதுறை அருகே மாப்படுகை அண்ணாசாலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை சம்பள பாக்கியை தீபாவளி பண்டிகைக்குள் வழங்கிட வலியுறுத்தியும், நான்கு மாத காலமாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்தும் 100 நாள் வேலைக்கான சம்பள நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்தும் மறியல் போராட்டத்தில் முழக்கமிட்டனர். இதனால் மயிலாடுதுறை கல்லணை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதேபோல் கலுக்காணிமுட்டம், கடலங்குடி, இளந்தோப்பு ஆகிய பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
100 நாள் வேலை… 4 மாத சம்பள பாக்கி… மார்க்சிஸ்ட் கம்யூ சாலை மறியல்..
- by Authour
