திருச்சி மவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை தொழிலாளிகள் சுமார் 200 பேர் இன்று வழக்கம்போல் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் அவர்களுக்கு இன்று விடுமுறை என தெரிவித்ததன் பேரில் பணியாளர்கள் அதிர்ச்செடைந்தனர். இது குறித்து நிர்வாகத்திடம் அவர்கள் விளக்கம் கேட்டு முறையான பதில் வராததை தொடர்ந்து திடீரென பஸ் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் நளினி, மற்றும் துணைத் தலைவர் மணிகண்டன், உப்பிலியபுரம் எஸ்ஐ செபாஷ்டின் சந்தியாகு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் இப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
