மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய பாக்கியை உடனே வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாற்று திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். 100 நாள் வேலை தொழிலாளர்கள் பணி செய்வதற்கான மஸ்டர் ரோல் முடிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஆனால் ஊதியத்துடன் இழப்பீட்டுத் தொகையாக 0.05% விழுக்காடு கூடுதலாக சேர்த்து வழங்க வேண்டும் என்ற சட்ட விதியின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
100 நாள் வேலை…. ஊதியத்தை வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..
- by Authour
