சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் தனியார் நகைக்கடையை திறந்து வைப்பதற்காக திரைப்பட நடிகை நமிதா வருகை தந்திருந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு செண்டை மேளங்கள் முழங்க வழக்கப்பட்டது அதனை தொடர்ந்து பத்திரிகையாளிடம் பேசியவர்:-
இன்று ரொம்ப மிகவும் நல்ல நாள் முக்கியமான நாள் ஏதாவது புதிய தொழில் துவங்க வேண்டும் என்றால் இந்த நாளில் துவங்குவது மிக ராசியாக இருக்கும்.
இரட்டை குழந்தைகள் பிறந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது மீண்டும் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். அடுத்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
இன்னொரு படத்தில் ஆரம்ப காலத்தில் நடித்தது போல் கிளாமராக கவர்ச்சியாக நடிக்க கூறினார்கள் அதை நான் மறுத்து விட்டேன் தொடர்ந்து சின்னத்திரை மற்றும் வெப் சீரிக்கலில் என்னை நீங்கள் பார்ப்பீர்கள்..
நான் வேலைக்கு வந்து விட்டால் என் கணவன் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளது இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளேன் அதனால் எனக்கு நிறைய வேலை உதவிகள் வீட்டிலேயே தேவைப்படுகிறது.
அந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக என் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக நான் ஒப்படைத்து விட்டேன் தொடர்ந்து மீண்டும் நடிக்க உள்ளேன் 100% கவர்ச்சியான வேடங்களில் நான் நடிக்க மாட்டேன்.
நான் ஒரு தாயாக இருப்பதை மிக மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் ஏற்றுக் கொள்கிறேன் அதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது
ஒரு குழந்தையிடம் தாய் தாயாக தான் இருப்பார்கள் நான் அவர்களை சுத்தம் செய்யவும் வேலையாட்களை எதிற்பார்பதில்லை உடனடியாக நானே செய்கிறேன் அங்கு நான் ஒரு பிரபலம் என்பதை அடையாளப்படுத்த முடியாது.
ஒரு தாய் நிச்சயமாக தாயாக தான் இருக்க முடியும் ஒரு குழந்தை வலது புறமாக ஓடும் ஒரு குழந்தை இடது புறமாக ஓடும் ஆனால் இரண்டு குழந்தைகளுக்கும் அம்மா தேவை நான் வீட்டில் அம்மாவாக இருப்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன்.
நான் கர்ப்பமாக இருக்கும் பொழுது கடவுளிடம் வேண்டிக் கொண்டேன் அது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி கடவுள் பெயர்தான் வைப்பேன் என அதனால் கிருஷ்ணா.. கியான்.. என வைத்துள்ளேன் இரண்டுமே கிருஷ்ணரின் பெயர்தான்.