Skip to content

தமிழகத்தில் 100 அமுதம் அங்காடிகள் திறப்பு- அமைச்சர் சக்கரபாணி தகவல்

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது இதில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் அர. சக்கரபாணி கூறியதாவது:

கடந்த 45 மாத கால ஆட்சியில் தமிழகத்தில் புதிதாக 17. 50 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 5264 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டத்தில் புதிதாக 53 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நமது அமைச்சர் செந்தில் பாலாஜி  பொறுப்பு அமைச்சராக உள்ள கோவை மாவட்டத்தில் 100 ரேஷன் கடைகள் ஒரே நாளில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2500 முழு நேர மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் 639 ரேஷன் கடைகள் மூலம் மூன்று லட்சத்து38 ஆயிரத்து 198 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நெல் குவிண்டாலுக்கு சன்ன ரகத்திற்கு 1960 ரூபாய், பொது ரகத்திற்கு 1905 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் இது 2450 ரூபாயாக வழங்கப்பட்டு வருகிறது. இது தேர்தலில் அளித்த வாக்குறுதி படி வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 2500 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுக்க 103 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இவற்றில் தார்ப்பாய் மூலம் நெல்களை பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு நெல்மணி கூட மழையில் நனைந்து வீணாக கூடாது என்பதற்காக ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டு செமி கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் நெல் மழையில் நனைவது தடுக்கப்படும். தமிழகத்தில் 376 அரவை ஆலைகள் மூலம் நெல் அரைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தற்போது 700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு ரேஷன் கடைகள் மூலம் 3.76 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தலைவராக கொண்டு ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி வழங்கலாம்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தில் அரிசி 3.76 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. ஆனால் நமது மாநிலத்தில் உற்பத்தி போதுமானதாக இல்லை. இதனால், வெளிமாநிலத்தில் இருந்து அரிசி விலை கொடுத்து வாங்கி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 100 அமுதம் அங்காடிகள் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்  ரூ 1000 முதல் 1500 வரை சேமிப்பு ஏற்படும் .

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!