தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் கடும் பனிப்பொழிவினால் புகையான் பூச்சி தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பட்டுக்கோட்டை பகுதியில் கடும் பனிப்ொழிவு இருந்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் காய்ந்து கருகி போயுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். பனிப்பொழிவால் அனைத்தும் நாசமாகியுள்ளது.
பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியும் புகையான் பூச்சியை கட்டுப்ப டுத்த முடியவில்லை. நெற்பயிர்கள் அனைத்தும் சேதமாகியுள்ளதால் வேளாண் துறை அதிகாரிகள் விளைநிலங்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வாங்கித் தர வேண்டும். இல்லையேல் இன்சூரன்ஸ் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்”, என்றனர்.